Skip to main content

ராஜராஜ சோழனின் பெருமைவாய்ந்த சிறப்புகள் மற்றும் வரலாறுகள்.

      **கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி,  நம் தமிழ் குடியாகும்**

இப்படி தமிழின் பெருமைகளையும், தமிழ் மக்களின் பெருமைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கையும், கலையும், வீரமும் கல்வெட்டிலே பதிக்கப்பட்ட வேண்டியவை. பல ஆண்டுகள் கழித்தும் இந்த உலகமே கண்டு வியக்கும்மாறு, தாம் வாழ்ந்து வந்த அடையாளத்தையும் வீர செயல்களையும் விட்டுச்சென்ற மன்னன் ராஜராஜசோழன்.

கிபி 957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும், சேர நாட்டு வானவன் மகாதவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவர் நம் ராஜ ராஜ சோழன்.

தந்தை மறைவுக்கு பின் உத்தமசோழனின் 15 ஆண்டு ஆட்சிக்கு பின்பே ஜனநாயக முறைப்படி ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.

அதுவரை அருள்மொழி வர்மன் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர் மக்களால் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார்.

தென்னிந்திய வரலாற்றிலேயே ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.

கடற்படையை பல பிரிவுகளாக பயன்படுத்தி, பல நாடுகளையும் கைப்பற்றினார், அதுமட்டுமல்லாமல் யானைப்படையை முதன்முதலாக உருவாகிவரும் ராஜராஜ சோழன் தான்.

தான் கைப்பற்றிய இடங்களில் எல்லாம் சிவன் ஆலயங்களையும் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

போர் கலையில் மிகச் சிறப்பு வாய்ந்த ராஜராஜசோழன், அதே சிறபுகழோடும் பெருமையோடும் பல நூற்றாண்டுகளாக நிலைத்து இருக்கும் வண்ணம் ஒரு கோவிலை கட்ட எண்ணினார்.

ராஜ ராஜரின் குரு கருவூரார் சித்தரின் வழிகாட்டுதலின்படி குஞ்சர மல்லன், ராஜராஜ பெருந்தச்சன் என்ற இரண்டு பொறியாளர்கள் அந்தக் கோவிலுக்கு வடிவம் கொடுத்தனர்.

ஒரு லட்சத்து 30 ஆயிரம் டன் எடை கொண்ட கிரானைட் கற்களை 69 மைல் தூரத்தில் இருந்த நார்த்தாமலையிலிருந்து யானைகளை கொண்டு எடுத்து வரப்பட்டது.

கற்களைக் கொண்டு வருவதற்கு 30 ஆயிரம் யானைகளுக்கு மேல் பயன்படுத்தினார், கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு 600 சிற்பிகளையும், ஒரு லட்சத் தொழிலாளர்களையும் கோவில் எழுப்புவதற்கு ஈடுபடுத்தினார்.

சிறப்பு வாய்ந்த 81 டன் எடை கொண்ட ஒரே கற்களால் ஆன விமானத்தை கோபுரத்திற்கு மேலிருந்து கீழ் வரை சரிவான சாரங்கள் அமைத்து யானைகள் மூலம் கீழிருந்து இழுத்துச் செல்லப்பட்டது.

கோவிலைக் கட்டிய மற்றும் கட்டியவர்களுக்கு உதவிய சிறு குழந்தைகள் முதல் வயதானவர் வரை உள்ளவர்களின் பெயர்களை கல்வெட்டிலே பதிக்கும்மாறு மன்னன் உத்தரவிட்டான்.

ஒரு பிரம்மாண்டமான பெரிய சிவலிங்கத்தை செய்து தனது பக்தியை காட்ட விரும்பிய ராஜராஜ சோழன் அதில் தன் தமிழின் மீது உள்ள பக்தியையும் புகுத்தியுள்ளார் ஆம்.

        *தமிழ் மெய் எழுத்து 18 என்பதற்கேற்ப லிங்கத்திற்கு அடியில் உள்ள உயரம் 18 அடியாக அமைத்துள்ளார்.

         *தமிழின் உயிரெழுத்து 12 என்பதற்கேற்ப லிங்கத்தின் மொத்த உயரம் 12 அடிகள் அமைத்துள்ளார்.

          *தமிழின் உயிர்மெய் எழுத்துக்கள் 216 என்பதற்கேற்ப கோபுரத்தின் மொத்த உயரம் 216 அடியாக அமைத்துள்ளார்.

          *தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் இடையே உள்ள தொலைவு 247 அடியாக அமைத்துள்ளார்.

இன்றைய காலங்களில் வானளாவிய கட்டிடங்களை கட்டுவது மிகவும் சுலபம் ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 7 ஆண்டுகளாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில், பல இயற்கை சீற்றங்களையும் தாண்டி மிகவும் கம்பீரமாக நின்று கொண்டிருப்பது, அதன் கம்பீரம் தமிழ் மக்களின் சிறப்புகளை பெருமைப்படுத்துகிறது,

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் வேண்டும்.

இது போன்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோவிலை எழுப்பிய ராஜராஜசோழன் ஒரு தமிழன் என்பதை சொல்வதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்  மெய்சிலிர்க்கிறது.

அடுத்து வரும் தகவல்களில் தஞ்சை கோவிலில் உள்ள சிறப்புகளையும் ரகசியத்தையும் பற்றி பார்ப்போம் நன்றி.
மீண்டும் சந்திப்போம்...

Comments

  1. If you like it then don't forget to share you friends,
    Thanks for reading my post.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கீழடி அகழாய்வு - வைகை நதிக்கரைகளில் சங்ககால மக்களின் நகர நாகரிகம்.

மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம், கீழடியில் உள்ள வைகை நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் நகர நாகரிகம். அதனைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம். கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த தகவலின்படி நம்முடைய தமிழ்மொழி கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது, கிமு 6 ஆம் நூற்றாண்டு என்றால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இருந்து 2600 ஆண்டுகள் பழமையானது. அந்தக் காலகட்டத்திலேயே நம்முடைய தமிழ் மக்கள் எழுத்தாணி வைத்துக்கொண்டு எழுதவும் மற்றும் படிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதனை இந்த அகழாய்வு வெளிப்படுத்துகிறது. கீழடி அகழாய்வு கிடைத்த சில பொருள்கள் என்னவென்றால் 1.) அக்கால மக்கள் பல பானைகளை செய்து அந்தப் பானைகளின் மேல் தன்னுடைய பெயரையும் எழுதி வைத்துள்ளனர் 2.) மண்களால் செய்யப்பட்ட பல பொருள்கள் உள்ளன 3.) விவசாயம் செய்வதற்கும் மற்றும் தனது சொந்த தேவைகளுக்கும் அக்கால மக்கள் கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளனர், விலங்குகளின் எலும்புகள் பல கிடைத்திருக்கின்றது, குறிப்பாக ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தும் காளை மாட்டின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றது. 4...

உணவு உண்ணும்பொழுது தண்ணீரை இவ்வாறு குடிப்பதே உடலுக்கு நல்லது!

"நீரின்றி அமையாது உலகு" மனிதர்கள் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உணவு அருந்தும் போது எப்படி குடிக்க வேண்டும், எவ்வாறு குடித்தால் உடலுக்கு நல்லது என்று இங்கு பார்ப்போம். பொதுவாக தண்ணீரை சொம்பில் வாய்வைத்து குடிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் வாய் வைத்து குடிக்கும் பொழுது தான் தண்ணீர் நம் வாயில் இருக்கும் எச்சிலுடன் கலந்து கொண்டு வயிற்றுக்கு செல்லும், எச்சில் என்பது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, ஆதலால் தண்ணீர் குடிக்கும்போது வாய் வைத்துக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எண்ணை கலக்காத உணவுகளை சாப்பிட்ட பின் நாம் Hot water, Cold water and Normal water  ஆகிய அனைத்தையும் அருந்தலாம் இதனால் வயிற்றுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வராது, அதுவே எண்ணை கலந்த உணவுகளை உண்ட பின்பு கண்டிப்பாக Hot water குடிப்பது உடலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லதாகும், ஏனென்றால், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது ஆட்(Hot) வாட்டருடன் முழுமையாக கலந்து கொள்ளும், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானத...