Skip to main content

கீழடி அகழாய்வு - வைகை நதிக்கரைகளில் சங்ககால மக்களின் நகர நாகரிகம்.

மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம், கீழடியில் உள்ள வைகை நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் நகர நாகரிகம். அதனைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த தகவலின்படி நம்முடைய தமிழ்மொழி கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது, கிமு 6 ஆம் நூற்றாண்டு என்றால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இருந்து 2600 ஆண்டுகள் பழமையானது.

அந்தக் காலகட்டத்திலேயே நம்முடைய தமிழ் மக்கள் எழுத்தாணி வைத்துக்கொண்டு எழுதவும் மற்றும் படிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதனை இந்த அகழாய்வு வெளிப்படுத்துகிறது.

கீழடி அகழாய்வு கிடைத்த சில பொருள்கள் என்னவென்றால்

1.) அக்கால மக்கள் பல பானைகளை செய்து அந்தப் பானைகளின் மேல் தன்னுடைய பெயரையும் எழுதி வைத்துள்ளனர்

2.) மண்களால் செய்யப்பட்ட பல பொருள்கள் உள்ளன

3.) விவசாயம் செய்வதற்கும் மற்றும் தனது சொந்த தேவைகளுக்கும் அக்கால மக்கள் கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளனர், விலங்குகளின் எலும்புகள் பல கிடைத்திருக்கின்றது, குறிப்பாக ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தும் காளை மாட்டின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றது.

4.) அக்கால மக்கள் வணிகத்திலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர், ஏனென்றால் ரோம் நகரில் இருக்கும் சில ஆபரணங்களும் கீழடி அகழாய்வு கிடைத்திருக்கின்றது, அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து  பல பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்திருக்கின்றனர் என்றும் தெரியவருகிறது.

5.) செங்கலை கொண்டே கட்டிடங்களையும் கட்டியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

6.) யானைத் தந்தங்களைக் கொண்டு பல கருவிகளும் மற்றும் பல பொருட்களும் செய்து வைத்திருக்கின்றனர், மற்றும் பல ஆதாரங்களை இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

கீழடியில் கிடைத்த பொருள்களை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா, இத்தாலி மற்றும் பூனே ஆகிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது, ஆராய்ச்சியின் முடிவில், கிடைத்த பொருள்கள் அனைத்தும் சட்டபூர்வமாக கிமு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு நாம் நினைத்துக்கொண்டிருந்த தமிழ்மொழி தோன்றிய காலகட்டத்தைவிட 300 ஆண்டுகள் இன்னும் பழமையானது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்று சட்டப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தருணத்தை ஒரு பெரிய வரமாக இந்தியா கொண்டாடியிருக்க வேண்டும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இந்த தகவலை சில செய்திகளில் மற்றும் சில Youtube தமிழ் சேனல்களில் மட்டும்தான் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் இருப்பவர்கள் சிலர் தமிழ் பேசுபவர்களே தமிழை இழிவாகக் கருதுகின்றனர், உதாரணத்திற்கு இந்த வீடியோவை பாருங்கள்.

தற்போது நிகழ்ந்து வரும் ஓர் கேவலமான விஷயம் என்னவென்றால், ஆங்கிலத்தை தவறாக பேசினால் கூட அவனை மதிக்கின்றனர், ஆனால் ஒருவன் தமிழை மிகவும் சரியாக பேசினால் அவனை பார்த்து சிரிக்கின்றனர்.

நமது தாய் மொழியான தமிழ் மொழியை நாம் தாம் அழியாமல் காப்பாற்ற வேண்டும், நம் தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு நாம் தான் பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும்.

---வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்---

Comments

Popular posts from this blog

ராஜராஜ சோழனின் பெருமைவாய்ந்த சிறப்புகள் மற்றும் வரலாறுகள்.

      **கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி,  நம் தமிழ் குடியாகும்** இப்படி தமிழின் பெருமைகளையும், தமிழ் மக்களின் பெருமைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கையும், கலையும், வீரமும் கல்வெட்டிலே பதிக்கப்பட்ட வேண்டியவை. பல ஆண்டுகள் கழித்தும் இந்த உலகமே கண்டு வியக்கும்மாறு, தாம் வாழ்ந்து வந்த அடையாளத்தையும் வீர செயல்களையும் விட்டுச்சென்ற மன்னன் ராஜராஜசோழன் . கிபி 957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும் , சேர நாட்டு வானவன் மகாதவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவர் நம் ராஜ ராஜ சோழன். தந்தை மறைவுக்கு பின் உத்தமசோழனின் 15 ஆண்டு ஆட்சிக்கு பின்பே ஜனநாயக முறைப்படி ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அதுவரை அருள்மொழி வர்மன் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர் மக்களால் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். தென்னிந்திய வரலாற்றிலேயே ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. கடற்படையை பல பிரிவுகளாக பயன்படுத்தி, பல நாடுகளையும் கைப்பற்றினார், அதுமட்டுமல்லாமல் யானைப்படையை முதன்முதலாக உருவாகிவரும் ராஜராஜ சோழன் தான். ...

உணவு உண்ணும்பொழுது தண்ணீரை இவ்வாறு குடிப்பதே உடலுக்கு நல்லது!

"நீரின்றி அமையாது உலகு" மனிதர்கள் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உணவு அருந்தும் போது எப்படி குடிக்க வேண்டும், எவ்வாறு குடித்தால் உடலுக்கு நல்லது என்று இங்கு பார்ப்போம். பொதுவாக தண்ணீரை சொம்பில் வாய்வைத்து குடிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் வாய் வைத்து குடிக்கும் பொழுது தான் தண்ணீர் நம் வாயில் இருக்கும் எச்சிலுடன் கலந்து கொண்டு வயிற்றுக்கு செல்லும், எச்சில் என்பது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, ஆதலால் தண்ணீர் குடிக்கும்போது வாய் வைத்துக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எண்ணை கலக்காத உணவுகளை சாப்பிட்ட பின் நாம் Hot water, Cold water and Normal water  ஆகிய அனைத்தையும் அருந்தலாம் இதனால் வயிற்றுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வராது, அதுவே எண்ணை கலந்த உணவுகளை உண்ட பின்பு கண்டிப்பாக Hot water குடிப்பது உடலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லதாகும், ஏனென்றால், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது ஆட்(Hot) வாட்டருடன் முழுமையாக கலந்து கொள்ளும், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானத...