Skip to main content

விக்ரம் லேண்டர் செயலிழக்க காரணம் இதுதான், விலகியது மர்மம்.

விக்ரம் லேண்டர் தற்போது தொடர்பை இழந்து நிலவில் இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அது ஏன் தொடர்பை இழந்தது என்று ஐரோபன் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜன்ஸி, தற்போது ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறது.

விக்ரம் லேண்டர், தொடர்பை இழந்ததற்கு என்ன காரணம் என்று இப்பதவியில் தெளிவாக பார்ப்போம் வாருங்கள்.

இந்தியா, விக்ரம் லேண்டரை தற்போது நிலவின் தென்துருவத்தில் இறக்கியது போல், ஐரோப்பான் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சியும் 2018 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஒரு லேண்டர் இறக்குவதற்காக திட்டமிட்டனர், ஆனால் பணப்பற்றாக்குறையால் அந்த முடிவை கைவிட்டது ஐரோபேன் ஸ்பேஸ் ரிசர்ச் ஏஜென்சி.

இந்த நிலையில் அவர்கள் தற்போது கனடா மற்றும் ஜப்பான் ஸ்பேஸ் ஏஜன்ஸியுடன் சேர்ந்து அந்த முயற்சியை மீண்டும் தொடர்கின்றனர்,

அதற்காக அவர்கள் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ந்தபோது சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது ஒரு லேண்டரை நிறைவில் தென் துருவத்தில் தரை இறக்க வேண்டுமென்றால், நாம் என்னென்ன தடைகளை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளனர்.

அந்த பதிவினில் ஐரோபன் ஸ்பேஸ் ஏஜன்ஸி, விக்ரம் லேண்டரை பற்றியும் சில தகவல்களை தெரிவித்துள்ளனர், விக்ரம் லேண்டர் எதனால் சிக்னலை இழந்தது என்று சில உண்மைகளை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அவர்கள் தெரிவித்தது என்னவென்றால் நிலவின் தென்துருவப் பகுதியில் லூனார் டெஸ்ட் (துகள்கள்) என்று சொல்லக்கூடிய தூசிகள் அதிக அளவில் நிலவின் தென் துருவப் பகுதியில் இருக்கிறது என்றும், அந்த தூசிகள் அதிகம் மின்காந்த சக்தியால் நிலவில் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்றும், அதிகமான கதிர்வீச்சுகளும் இருக்கிறது என்றும், இவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்ன விளைவு ஆகும் என்று இதுவரையிலும் யாராலும் கணிக்க முடியாமல் இருக்கிறது.

அந்த லூனார் டெஸ்ட் துகள்களை பற்றி நிறைய ஆராய வேண்டும், அவ்வாறு ஆராய்ந்த பிறகே அதன் விளைவுகள் என்னவாகும் என்று முழுமையாக சொல்ல முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர்கள் விக்ரம் லேண்ட் பற்றி தெரிவிப்பது என்னவென்றால், அந்த லூனார் டெஸ்ட் விக்ரம் லாண்டரின் மீது படிந்தால் அதிலுள்ள கதிர்வீச்சுகள் விக்ரம் லேண்டர் உடன் கலந்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும், அந்த லேண்டர் இயங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சோலார் பேனல், அந்த சோலார் பேனல் மீது இந்த தூசி படிவங்கள் படிந்தால் அது சூரியனிடமிருந்து எடுத்துக்கொள்ளும் ஆற்றலின் அளவை குறைத்துவிடும், ஆதலால் லேண்டர் செயலிழந்து போவதற்கு நிறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அங்கு இருக்கும் லூனார் டெஸ்டில் அதிக அளவில் கதிர்வீச்சுகள் இருப்பதால் எதிர்காலத்தில் அந்த இடத்திற்குச் செல்லும் லேண்டருக்கும் மனிதர்களுக்கும் பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இவை அனைத்தும் வைத்துப் பார்க்கும்பொழுது நிலவின் தென்துருவத்தில் உள்ள லூனார் டெஸ்ட், கதிர்வீச்சுகள் மற்றும் பல, இவைகளால்தான் விக்ரம் லேண்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து, தரையில் இறங்கி இருக்கிறது என்று தெரியவருகிறது.

Click the logo to Subscribe:


Comments

Popular posts from this blog

ராஜராஜ சோழனின் பெருமைவாய்ந்த சிறப்புகள் மற்றும் வரலாறுகள்.

      **கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி,  நம் தமிழ் குடியாகும்** இப்படி தமிழின் பெருமைகளையும், தமிழ் மக்களின் பெருமைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கையும், கலையும், வீரமும் கல்வெட்டிலே பதிக்கப்பட்ட வேண்டியவை. பல ஆண்டுகள் கழித்தும் இந்த உலகமே கண்டு வியக்கும்மாறு, தாம் வாழ்ந்து வந்த அடையாளத்தையும் வீர செயல்களையும் விட்டுச்சென்ற மன்னன் ராஜராஜசோழன் . கிபி 957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும் , சேர நாட்டு வானவன் மகாதவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவர் நம் ராஜ ராஜ சோழன். தந்தை மறைவுக்கு பின் உத்தமசோழனின் 15 ஆண்டு ஆட்சிக்கு பின்பே ஜனநாயக முறைப்படி ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அதுவரை அருள்மொழி வர்மன் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர் மக்களால் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். தென்னிந்திய வரலாற்றிலேயே ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. கடற்படையை பல பிரிவுகளாக பயன்படுத்தி, பல நாடுகளையும் கைப்பற்றினார், அதுமட்டுமல்லாமல் யானைப்படையை முதன்முதலாக உருவாகிவரும் ராஜராஜ சோழன் தான். ...

கீழடி அகழாய்வு - வைகை நதிக்கரைகளில் சங்ககால மக்களின் நகர நாகரிகம்.

மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம், கீழடியில் உள்ள வைகை நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் நகர நாகரிகம். அதனைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம். கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த தகவலின்படி நம்முடைய தமிழ்மொழி கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது, கிமு 6 ஆம் நூற்றாண்டு என்றால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இருந்து 2600 ஆண்டுகள் பழமையானது. அந்தக் காலகட்டத்திலேயே நம்முடைய தமிழ் மக்கள் எழுத்தாணி வைத்துக்கொண்டு எழுதவும் மற்றும் படிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதனை இந்த அகழாய்வு வெளிப்படுத்துகிறது. கீழடி அகழாய்வு கிடைத்த சில பொருள்கள் என்னவென்றால் 1.) அக்கால மக்கள் பல பானைகளை செய்து அந்தப் பானைகளின் மேல் தன்னுடைய பெயரையும் எழுதி வைத்துள்ளனர் 2.) மண்களால் செய்யப்பட்ட பல பொருள்கள் உள்ளன 3.) விவசாயம் செய்வதற்கும் மற்றும் தனது சொந்த தேவைகளுக்கும் அக்கால மக்கள் கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளனர், விலங்குகளின் எலும்புகள் பல கிடைத்திருக்கின்றது, குறிப்பாக ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தும் காளை மாட்டின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றது. 4...

உணவு உண்ணும்பொழுது தண்ணீரை இவ்வாறு குடிப்பதே உடலுக்கு நல்லது!

"நீரின்றி அமையாது உலகு" மனிதர்கள் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உணவு அருந்தும் போது எப்படி குடிக்க வேண்டும், எவ்வாறு குடித்தால் உடலுக்கு நல்லது என்று இங்கு பார்ப்போம். பொதுவாக தண்ணீரை சொம்பில் வாய்வைத்து குடிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் வாய் வைத்து குடிக்கும் பொழுது தான் தண்ணீர் நம் வாயில் இருக்கும் எச்சிலுடன் கலந்து கொண்டு வயிற்றுக்கு செல்லும், எச்சில் என்பது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, ஆதலால் தண்ணீர் குடிக்கும்போது வாய் வைத்துக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எண்ணை கலக்காத உணவுகளை சாப்பிட்ட பின் நாம் Hot water, Cold water and Normal water  ஆகிய அனைத்தையும் அருந்தலாம் இதனால் வயிற்றுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வராது, அதுவே எண்ணை கலந்த உணவுகளை உண்ட பின்பு கண்டிப்பாக Hot water குடிப்பது உடலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லதாகும், ஏனென்றால், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது ஆட்(Hot) வாட்டருடன் முழுமையாக கலந்து கொள்ளும், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானத...