Skip to main content

சந்திரயான் 2 லேண்டரை பற்றி இன்று வெளிவந்த தகவல்கள்.

நிலவை காண்பித்து சோறூட்டிய காலம்போய் நிலவில் நாமும் கால்பதிக்கும் காலம் வந்துவிட்டது.

சந்திரயான் 2 வில் இருக்கும் முக்கிய பங்கான லேண்டர், சரியாக தரையிறங்கவில்லை என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான், அதனை ஒரு பேராஷூட் வலியாக தரையிறக்கி இருந்தால் சரியாக அமைத்திருக்கும் என்று பலரும் நினைத்து வந்திருப்பீர்கள்.

லேண்டர் நிலவைச் சென்றடைவதற்கு முன் 2.1 கிலோ மீட்டருக்கு முன்பே தனது சிக்னலை இழந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும், அதுமட்டுமல்லாமல் அந்த லேண்டர் 2.1 கிலோ மீட்டரிலிருந்து கீழே தாறுமாறாக விழுந்திருக்கும் என்று அனைவரும் நினைத்திருப்பீர்கள், ஏனென்றால் 2.1 கிலோ மீட்டர் என்பது மிகவும் தொலைவான தூரம்.

அவ்வளவு தூரத்திலிருந்து ஒரு பொருள் கீழே விழுந்தாள் அந்தப் பொருள் சுக்குநூறாகிவிடும், இருந்தாலும் லேண்டர் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர், அது எப்படி சாத்தியம்.

முதலில் நாம் நிலவைப் பற்றி அறிந்து கொள்வோம், பூமியில் அதிக அளவில் காற்று இருக்கிறது, ஆனால் நிலவில் காற்று என்பது குறைந்த அளவில்தான் இருக்கிறது, சொல்லப்போனால் அங்கு காற்று இல்லை என்றும் கூட சொல்லலாம்.

பூமியில் காற்று இருப்பதால் தான் இங்கு பேராஷூட்டை பயன்படுத்தினால் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கீழே வந்து சேர முடிகிறது, ஆனால் நிலவில் இதனை பயன்படுத்தினால் நன்றாக வேலை செய்யாது, ஆதலால்தான் பேராசூட்டிலிருந்து லேண்டர் இறக்குவதை விஞ்ஞானிகள் தவிர்த்தனர்.

பூமியில் ஒரு பொருளை தூக்கி போட்டால் கீழே வேகமாக வருவதற்கு புவியீர்ப்பு விசை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது, பூமியை காட்டிலும் நிலவில் புவியீர்ப்பு விசை 6 மடங்கு குறைவாகவே உள்ளது, அதனால் தான் விக்ரம் லேண்டருக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் விஞ்ஞானிகள் லேண்டரின் வேகத்தை 2.1 கிலோ மீட்டருக்கு முன்பே குறைத்து விட்டனர், இருந்தாலும் இப்படி பாதிப்பு ஏற்பட்டால் லேண்டரின் கால்கள் மிகவும் வலிமையாக தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது ஆதலால் தான் லேண்டருக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

விஞ்ஞானிகள் லேண்டரை மொத்தம் 14 நாட்களுக்குள் தொடர்பு கொள்ள வேண்டும், ஏனென்றால் நிலவில் 14 நாட்கள் இருளாகவும் 14 நாட்கள் வெளிச்சமாகவும் இருக்கும், இப்பொழுது லேண்டர் வெளிச்சமாக இருக்கும் இடத்தில் இருக்கிறது, 14 நாட்கள் கழித்து லேண்டர் இருக்கும் இடம் இருள் ஆகிவிடும், இருளில் அங்கு -173° C இருக்கும் அதில் லேண்டர் முழுவதும் உறைந்து போய்விடும்.

அது ஏன் குறிப்பாக சந்திராயன்-2 நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பினார்கள் என்பதை தெரிந்து கொள்ள 2008 ஆமாண்டு அனுப்பப்பட்ட சந்திராயன் ஒன்றைப்பற்றி கொஞ்சம் தெரிய வேண்டும், நிலவில் தண்ணீர் இல்லை என்று அனைவரும் நினைத்திருந்த போது சந்திராயன்-1 நிலவில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளத்தை கண்டுபிடித்தது, அதனையடுத்து தான் தண்ணீர் இருக்கும் இடத்தை ஆராய்வதற்காக சந்திராயன் 2 அனுப்பப்பட்டது.

விஞ்ஞானிகளின் கருத்தின்படி லேண்டர் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தள்ளி இறங்கியிருப்பதுமட்டுமல்லாமல் கொஞ்சம் மோசமாக இறங்கியிருக்கிறது, அதனால்தான் இன்னும் ஆண்டனாவில் இருந்து சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை.

லேண்டரின் சில புகைப்படங்களை ஆர்பிட்டர் எடுத்துள்ளது, ஆனாலும் அது கொஞ்சம் தெளிவாக இல்லை, ஆதலால் நிலவிற்கு இன்னும் சற்று அருகே சென்று லேண்டரை புகைப்படம் எடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் அதனை செய்தால் ஆர்பீட்டருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமென்று அதனை தவிர்த்து விட்டோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

இன்று இல்லை என்றாலும் நிலவிற்கு சென்று இந்தியா வெற்றிபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இப்பதிவினை குறித்து உங்களுக்கு ஏதாவது சொல்லவேண்டும் என்று தோன்றினால் தாராளமாக கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம். மீண்டும் சந்திப்போம், நன்றி,...

Comments

Popular posts from this blog

ராஜராஜ சோழனின் பெருமைவாய்ந்த சிறப்புகள் மற்றும் வரலாறுகள்.

      **கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி,  நம் தமிழ் குடியாகும்** இப்படி தமிழின் பெருமைகளையும், தமிழ் மக்களின் பெருமைகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கையும், கலையும், வீரமும் கல்வெட்டிலே பதிக்கப்பட்ட வேண்டியவை. பல ஆண்டுகள் கழித்தும் இந்த உலகமே கண்டு வியக்கும்மாறு, தாம் வாழ்ந்து வந்த அடையாளத்தையும் வீர செயல்களையும் விட்டுச்சென்ற மன்னன் ராஜராஜசோழன் . கிபி 957 முதல் 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும் , சேர நாட்டு வானவன் மகாதவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவர் நம் ராஜ ராஜ சோழன். தந்தை மறைவுக்கு பின் உத்தமசோழனின் 15 ஆண்டு ஆட்சிக்கு பின்பே ஜனநாயக முறைப்படி ஆட்சியை ஏற்றுக்கொண்டார். அதுவரை அருள்மொழி வர்மன் என்னும் இயற்பெயரைக் கொண்ட அவர் மக்களால் ராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். தென்னிந்திய வரலாற்றிலேயே ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. கடற்படையை பல பிரிவுகளாக பயன்படுத்தி, பல நாடுகளையும் கைப்பற்றினார், அதுமட்டுமல்லாமல் யானைப்படையை முதன்முதலாக உருவாகிவரும் ராஜராஜ சோழன் தான். ...

கீழடி அகழாய்வு - வைகை நதிக்கரைகளில் சங்ககால மக்களின் நகர நாகரிகம்.

மிகவும் தொன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகம், கீழடியில் உள்ள வைகை நதிக்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் நகர நாகரிகம். அதனைப் பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம். கீழடியில் நடத்திய அகழாய்வில் கிடைத்த தகவலின்படி நம்முடைய தமிழ்மொழி கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தெரியவருகிறது, கிமு 6 ஆம் நூற்றாண்டு என்றால் தற்போது இருக்கும் காலகட்டத்தில் இருந்து 2600 ஆண்டுகள் பழமையானது. அந்தக் காலகட்டத்திலேயே நம்முடைய தமிழ் மக்கள் எழுத்தாணி வைத்துக்கொண்டு எழுதவும் மற்றும் படிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதனை இந்த அகழாய்வு வெளிப்படுத்துகிறது. கீழடி அகழாய்வு கிடைத்த சில பொருள்கள் என்னவென்றால் 1.) அக்கால மக்கள் பல பானைகளை செய்து அந்தப் பானைகளின் மேல் தன்னுடைய பெயரையும் எழுதி வைத்துள்ளனர் 2.) மண்களால் செய்யப்பட்ட பல பொருள்கள் உள்ளன 3.) விவசாயம் செய்வதற்கும் மற்றும் தனது சொந்த தேவைகளுக்கும் அக்கால மக்கள் கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளனர், விலங்குகளின் எலும்புகள் பல கிடைத்திருக்கின்றது, குறிப்பாக ஜல்லிக்கட்டிற்கு பயன்படுத்தும் காளை மாட்டின் எலும்புகளும் கிடைத்திருக்கின்றது. 4...

உணவு உண்ணும்பொழுது தண்ணீரை இவ்வாறு குடிப்பதே உடலுக்கு நல்லது!

"நீரின்றி அமையாது உலகு" மனிதர்கள் வாழ்வதற்கு தண்ணீர் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, அப்படிப்பட்ட தண்ணீரை நாம் உணவு அருந்தும் போது எப்படி குடிக்க வேண்டும், எவ்வாறு குடித்தால் உடலுக்கு நல்லது என்று இங்கு பார்ப்போம். பொதுவாக தண்ணீரை சொம்பில் வாய்வைத்து குடிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் வாய் வைத்து குடிக்கும் பொழுது தான் தண்ணீர் நம் வாயில் இருக்கும் எச்சிலுடன் கலந்து கொண்டு வயிற்றுக்கு செல்லும், எச்சில் என்பது நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருக்கிறது, ஆதலால் தண்ணீர் குடிக்கும்போது வாய் வைத்துக் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. எண்ணை கலக்காத உணவுகளை சாப்பிட்ட பின் நாம் Hot water, Cold water and Normal water  ஆகிய அனைத்தையும் அருந்தலாம் இதனால் வயிற்றுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் வராது, அதுவே எண்ணை கலந்த உணவுகளை உண்ட பின்பு கண்டிப்பாக Hot water குடிப்பது உடலுக்கும், வயிற்றுக்கும் மிகவும் நல்லதாகும், ஏனென்றால், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானது ஆட்(Hot) வாட்டருடன் முழுமையாக கலந்து கொள்ளும், வயிற்றுக்குள் இருக்கும் எண்ணெயானத...